மக்களவை தேர்தல் 2024 | 'வார் ரூம்' அமைத்தது திமுக

மக்களவை தேர்தல் நெருங்கிவரும் சூழலில், பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையாக திமுக வார் ரூம் அமைத்துள்ளது.
திமுக - அண்ணா அறிவாலயம்
திமுக - அண்ணா அறிவாலயம்கோப்புப்படம்

தேர்தல் நடைமுறைகள் நாளுக்கு நாள் மாறிவரும் நிலையில் அதனை எதிர்கொள்ளும் கட்சிகளுடைய திட்டமிடல்களும் மாறி வருகிறது. அப்படி தற்போதைய தேர்தல் களத்தில் தவிர்க்க முடியாதது WAR ROOM கலாசாரம்.

மக்களவை தேர்தல் நெருங்கிவரும் சூழலில், தேர்தல் நேரங்களில் எழும் புகார்களை கையாள்வதற்காக திமுக தரப்பில் தற்போது WAR ROOM அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து செயல்படக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள WAR ROOMக்கு திமுக நிர்வாகிகள் அன்பகம் கலை, ஆஸ்டின், என்ஆர் இளங்கோ ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க மாவட்டந்தோரும் WAR ROOM கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக - அண்ணா அறிவாலயம்
400 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் மோடி ஆட்சி செய்வார் - அண்ணாமலை நம்பிக்கை

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com