400 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் மோடி ஆட்சி செய்வார் - அண்ணாமலை நம்பிக்கை

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸிற்காகவே பூவிருந்தவல்லியில் ரூ.500 கோடியில் பிலிம் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
Annamalai
Annamalaipt web

செய்தியாளர்: ஆவடி நவீன்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் யாத்திரையை தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளில் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் பூவிருந்தவல்லியில் யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை, பூவிருந்தவல்லி அடுத்த நசரேத்பேட்டையில் மக்கள் முன்பாக பேசினார். அப்போது....

Annamalai
Annamalaipt desk

2023 மிக்ஜாம் புயலில் பூவிருந்தவல்லி மிதந்தது. வடிகால், குடிநீர் மற்றும் சாலைக்கு தீர்வு காண வேண்டும். கலைஞர் 100 விழாவில் சினிமாக்காரர்களை அழைத்து 500 கோடியில் பூவிருந்தவல்லியில் பிலிம் சிட்டி திட்டம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த 500 கோடி இருந்தால் மக்களுக்கு நல்ல சாலை, குடிநீர், பாதாள சாக்கடை ஆகிய திட்டங்களைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் படம் தயாரிக்க ஒரு பிலிம் சிட்டி தேவை அதற்கு தான் இந்த பிலிம் சிட்டி.

இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் முதல்வர் பணி செய்வது 36 சதவீதம் என வந்துள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூர் போன்ற சிட்டிகள் தரம் உயர்ந்துள்ளது ஆனால், சென்னை அப்படியே உள்ளது. சென்னையை சுற்றியுள்ள தொகுதிகள் அதலபாதளத்தில் செல்கிறது. இதற்கு திமுகவின் குடும்ப ஆட்சி தான் காரணம். தூய்மை நகரம் பட்டியலில் 44 வது இடத்தில் இருந்த சென்னை தற்போது 199 வது இடத்திற்கு சென்றுள்ளது. 12 சதவீதம் குப்பைகள் மட்டும் தான் சென்னையில் அகற்றப்படுகிறது. அதுவும் எரித்தும் மக்கியும் அகற்றப்படுகிறது. மீதமுள்ள குப்பைகள் அப்படியே இருக்கிறது.

PM Modi
PM Modifile

2024 - 2029 பாஜக ஆட்சியில் அனைத்து வீட்டிற்கு கேஸ் இணைப்பு, சுத்தமான குடிநீர், 300 யூனிட் சோலார் மூலம் மானிய கரண்ட் என பல்வேறு திட்டங்கள் உள்ளது. 400 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் மோடி ஆட்சி செய்வார். தமிழ்நாட்டில் 8 ஆயிரம் பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் பற்றாக்குறை பணம் இல்லை என பல காரணங்களால் கடந்த 36 மாதத்தில் 8 ஆயிரம் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தின் வளர்ச்சி ஸ்டாண்ட் போட்ட சைக்கிள் போன்று தான் உள்ளது. சக்கரம் சுத்தினாலும் தமிழ்நாடு முன்னேறவில்லை. தமிழ்நாடு குடும்ப அரசியலில் மாட்டிக் கொண்டு எந்தவொரு வளர்ச்சியும் இல்லாமல் இருந்து வருகிறது. அமைச்சர் சேகர் பாபு, அறநிலையத் துறைக்கு சம்மந்தமில்லாமல் பேசக்கூடியவர் .திருமழிசையில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் 80 சதவீதம் முடிந்துவிட்டது மார்ச் மாதம் திறக்கப்படும் என்றார். பின்னர் கடந்த ஆண்டு இறுதிக்குள் துவக்கப்படும் என்றார். ஆனால் துவக்கப்படவில்லை. ஆமை வேகத்தில் தான் திமுக திட்டங்கள் உள்ளது என்பதற்கு திருமழிசை பேருந்து நிலையம் ஒரு எடுத்துக்காட்டு.

annamalai
annamalaipt desk

வரி, உதவித் தொகை திட்டங்கள் என காங்கிரஸ் ஆட்சியைவிட பாஜக ஆட்சியில் பல மடங்கு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. மேலும் வடிகால் பணிக்கு மட்டும் கோடிக்கணக்கில் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசு ஒன்றும் செய்யவில்லை என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com