செந்தில் பாலாஜிமுகநூல்
தமிழ்நாடு
வங்கி ஆவணங்களை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் வங்கி ஆவணங்களை வழங்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களில் வேறுபாடுகள் உள்ளதால் விடுபட்ட ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அல்லி, வங்கி தொடர்பான ஆவணங்களை வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும், கரூர் சிட்டி யூனியன் வங்கி கிளையின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில் பாலாஜி தரப்பிற்கு வழங்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டார்.
senthil balaji ED
file
மேலும், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்கக் கோரிய மனுவில், செந்தில் பாலாஜி தரப்பு வாதத்திற்காக விசாரணையை ஜூலை 10ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 10ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.