வெங்கட் பிரபு - விஜய்
வெங்கட் பிரபு - விஜய்web

"நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்.. கைவிட மாட்டான்.." - இயக்குநர் வெங்கட் பிரபு பதிவு

2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றிபெற்ற பிறகும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் இழுபறியில் இருந்துவருகிறது.
Published on
Summary

தவெக பெரும்பான்மை எட்டாத நிலையில், திமுக-அதிமுக இணைந்து ஆட்சியமைக்கலாம் என்ற செய்தி தவெக ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசியல் குழப்பத்துக்கு மத்தியில், இயக்குநர் வெங்கட் பிரபு சமூக வலைதளத்தில் “நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்” என்று பதிவிட்டு, விஜயின் கட்சிக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. எனினும் ஆட்சி அமைக்க 118 இடங்கள் என்னும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மற்ற கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்தசூழலில் தான், ஆட்சியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் தவெக, திமுக கூட்டணிகளில் உள்ள கட்சிகளின் ஆதரவைப் பெற முயன்று வருகிறது.

விஜய் பரப்புரை
விஜய் பரப்புரைகோப்பு படம்

அந்தவகையில் தான், ஏற்கனவே காங்கிரஸின் ஆதரவை தவெக கோரியிருந்த நிலையில், விசிக மற்றும் இடது சாரிகளிடம் ஆதரவு கோரி தவெக தரப்பில் இருந்து கடிதம் அனுப்பட்டிருந்தது.

பெரும்பான்மை கிடைக்குமா என்ற குழப்பம் நீடித்துவரும் நிலையில், திமுக-அதிமுக இணைந்து ஆட்சியமைக்க உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக முன்மொழிப்பட்டதாகவும் செய்தி வெளியாகியிருப்பது தவெகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு, “நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்!!! நல்லதே நடக்கும்.. கான்ஃபிடென்டா இருப்போம்” என பதிவிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு - விஜய்
விஜய்க்கு எதிராக கைக்கோர்க்கும் திமுக-அதிமுக..? EPS முதலமைச்சர்..? அதிரவைத்த தகவல்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com