"நல்ல ஒரு தலைவனை இழந்துவிட்டோம்.." - இயக்குநர் பேரரசு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இயக்குநர் பேரரசு இரங்கல்.
இயக்குநர் பேரரசு இரங்கல்
இயக்குநர் பேரரசு இரங்கல்புதிய தலைமுறை

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் பேரரசும் தன் இரங்கலை தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பேரரசு
இயக்குநர் பேரரசு

அதில் அவர் “விஜயகாந்த்தின் இறப்பு செய்தி மிகுந்த அதிர்ச்சியாக உள்ளது. அவரின் தனிப்பெரும் சிறப்பு என்னவென்றால் எந்த அளவிற்கு ரசிகர்கள் அவரை நேசிக்கிறார்களோ அதை விட பல மடங்கு அவர் ரசிகர்களை நேசிப்பார்.

இயக்குநர் பேரரசு இரங்கல்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்

முழுக்க முழுக்க மக்களை நேசித்த அரசியல்வாதி அவர். சுயநலமாக இல்லாமல், பதவி ஆசை இல்லாமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை படைத்தவர். இதுதான் மற்றவர்களுக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம். விஜயகாந்த் என்றாலே வயிறார உணவு அளிப்பார் என்று பலரும் கூறுவர். அது உண்மைதான்.

படப்பிடிப்பில் கூட பல முறை எங்களுக்கு உணவு வழங்கியுள்ளார். இப்படி மற்றவர்களுக்கு உணவளித்து அதை காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடையும் மனிதர் அவர். எனவே நல்ல ஒரு தலைவரை நாம் இழந்துவிட்டோம்.” என்றுள்ளார்.

இயக்குநர் பேரரசு இரங்கல்
🔴LIVE | RIP Vijayakanth | குவிந்த தொண்டர்கள்... கடும் போக்குவரத்து நெரிசல்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com