மன்னார்குடி இராஜகோபால் சுவாமி கோயிலில் இயக்குனர் அட்லி சாமி தரிசனம்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள இராஜகோபால் சுவாமி திருக்கோயிலில் திரைப்பட இயக்குனர் அட்லி தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
Director Atlee
Director Atleept desk

ஆர்யா - நயன்தாரா - ஜெய் - நஸ்ரியா நடித்த ராஜா ராணி, விஜய் நடித்த பிகில், மெர்சல், தெறி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் அட்லி. சமீபத்தில் ஷாருக்கானை வைத்து பதான் படத்தை இயக்கி இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநரானார். இவர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வேளுக்குடி கிராமத்தில் உள்ள தனது குலதெய்வம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய, மனைவி பிரியா மற்றும் குழந்தை மீனு ஆகியோருடன் இன்று மன்னார்குடி சென்றுள்ளார்.

Director Atlee
“என் கனவு வாழ்க்கையை வாழ்வதாக நினைக்கிறேன்”- ஜவான் குறித்து நெகிழ்ந்த இயக்குநர் அட்லீ!
அட்லீ பிரியா
அட்லீ பிரியா

இதற்காக மன்னார்குடியில் தங்கியிருந்த இவர், தனது குலதெய்வம் கோயிலுக்குச் செல்வதற்கு முன்பாக மன்னார்குடியில் உள்ள இராஜகோபால சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடியில் உள்ள குலதெய்வம் கோயிலான ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டுச் சென்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com