“என் கனவு வாழ்க்கையை வாழ்வதாக நினைக்கிறேன்”- ஜவான் குறித்து நெகிழ்ந்த இயக்குநர் அட்லீ!

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ட்விட்டர் பதிவுக்கு, இயக்குநர் அட்லீ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து நெகிழ்ந்துள்ளார்
ஷாருக்கான், அட்லீ
ஷாருக்கான், அட்லீfile image

‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் அட்லீ, பின்னர் விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய 3 வெற்றிப் படங்களைத் தந்ததையடுத்து, தற்போது இந்தியில் நடிகர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியா மணி, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர், யோகி பாபு, சிறப்புத் தோற்றத்தில் தீபிகா படுகோனே, சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

ஷாருக்கான், அட்லீ
ஷாருக்கான், அட்லீtwitter

‘ஜவான்’ படம், இயக்குநர் அட்லீ மற்றும் நயன்தாராவுக்கு பாலிவுட்டில் அறிமுக படம் என்பதால் ஏராளமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இப்படம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. கடந்த 10ஆம் தேதி, இப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது.

ஷாருக்கான், அட்லீ
“இது வெறும் ஆரம்பம்தான்...” - ஷாருக்கான், அட்லீயின் ‘ஜவான்’ படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியீடு!

முன்னோட்ட வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதுகுறித்து ட்விட்டரில் ஷாருக்கான் பதிவிட்டிருந்தார். அதில் அட்லீக்கும் நன்றி தெரிவித்திருந்தார் ஷாருக்.

அதற்கு ரீட்வீட் செய்து அட்லீயும் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், “அரசர்களின் கதைகளைப் படித்ததில் இருந்து நிஜ வாழ்க்கையில் அப்படியான ஒருவருடனேயே பயணித்தது என்பதை, என் கனவு வாழ்க்கையை நிஜத்தில் நான் வாழ்கிறேன் என்றே நினைக்கிறேன். இந்தப் படம் என்னுடைய வரம்புகளுக்கு மீறி என்னை செயல்பட வைத்தது. அப்படி செயல்பட்டதிலிருந்து விலை மதிப்பற்ற பாடங்களை நான் கற்றுக்கொண்டேன்.

கடந்த 3 வருடங்களில் நான் உன்னிப்பாக சில விஷயஙக்ளை உங்களிடம் கண்டேன். குறிப்பாக சினிமா மீதான உங்கள் ஆர்வமும், நீங்கள் உழைத்த கடின உழைப்பும் எனக்கும் உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது. இந்த வாய்ப்பை கொடுத்த உங்களுக்கு படத்தின் மொத்த குழுவின் சார்பாக மறுபடியும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். கடவுள் என்னிடம் கருணையோடு இருக்கிறார்! எல்லோருக்கும் நன்றி" என நெகிழ்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com