\
Dioxin in Breast Milk & Tender Coconut Water: Truth Behind the Claim?
Sowmiya AnbumaniPT

தாய்ப்பாலிலும், இளநீரிலும் டயாக்சின்.. சௌமியா அன்புமணி கூறிய அதிரவைக்கும் தகவலின் உண்மை என்ன?

தாய்ப்பால் முதல் இளநீர் வரை!.. ‘டையாக்சின்’ நச்சு குறித்த அதிர்ச்சி தகவலின் உண்மை என்ன? என்பது குறித்து இங்கே பார்க்கலாம்
Published on

சென்னை பள்ளிக்கரணையில் தாய்ப்பாலிலும் கடலூரில் இளநீரிலும் புற்றுநோயை உண்டாக்கும் டையாக்சின் இருப்பதாக சட்டமன்றத்தில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கூற்று எந்த அளவுக்கு உண்மை என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

சட்டமன்றத்தில், அதிர்ச்சிக்குள்ளாக்கும் இரண்டு முக்கியமான தகவலை, சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி முன்வைத்தார். அதில் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் வசிக்கும் தாய்மார்களின் பாலில் டையாக்சின் இருப்பதாக ஆய்வுகள் கூறுவதாகவும், கடலூரில் விளையும் இளநீரில் டையாக்சின் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Sowmiya Anbumani
Sowmiya AnbumaniPt web

டையாக்சின் என்பது நீண்டகாலம் சுற்றுச்சூழலில் நீடிக்கக்கூடிய நச்சுத்தன்மை கொண்ட ரசாயன சேர்மங்களின் தொகுப்பு. அதன்படி சில தொழிற்சாலைகளின் செயல்முறைகள், கழிவுகளை எரிப்பதால் உருவாகக்கூடிய மாசுபாடுகள், சுற்றுச்சூழல் மற்றும் உணவுச்சங்கிலிகள் வழியாக மனித உடலுக்குள் செல்லலாம். உடலில் சேர்ந்த சில டையாக்சின்கள் கொழுப்பில் சேமிக்கப்படுவதால், தாய்ப்பாலிலும் கண்டறியப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Dioxin in Breast Milk & Tender Coconut Water: Truth Behind the Claim?
விஜய் மீது வழக்கு போட சொன்னேன்.. திமுக ஏன் செய்யவில்லை! - திருமாவளவன் பேச்சு!

இந்தநிலையில், டையாக்சின் குறித்து உண்மையில் நாம் பயப்பட வேண்டிய அளவுக்கு ஆபத்து இருக்கிறதா என்பது குறித்து விளக்குகிறார் குழந்தை நலப்பிரிவு தலைமை மருத்துவர் பிரசன்னா. மாசுபாட்டால் நீர், பழம், காய்கறிகளிலும் டையாக்சின் இருக்கலாம் உணவுச்சங்கிலியால் தாய்ப்பால், இளநீரிலும் டையாக்சின் இருக்கலாம் டையாக்சினின் அளவுதான் மிக முக்கியம் - அச்சம் வேண்டாம் டையாக்சினை உறுதி செய்ய மேலும் உயர் சோதனை, ஆராய்ச்சிகள் தேவை டையாக்சின் குறித்த இந்த கூற்றுகள் அச்சத்தை ஏற்படுத்தினாலும், உண்மை என்ன என்பதை அறிவியல் ரீதியிலான மேலும் பல ஆய்வுகள் மற்றும் முறையான பரிசோதனைகளையும் உறுதி செய்து, அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Dioxin in Breast Milk & Tender Coconut Water: Truth Behind the Claim?
விஜய்க்கு எதிராக ஒன்றிணைந்த கட்சிகள்! நிறைவேறுமா தலைமைச் செயலக கனவு? என்ன செய்யப் போகிறார் விஜய்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com