Bike theftpt desk
தமிழ்நாடு
திண்டுக்கல்: மதுபோதையில் பைக் மீது படுத்திருந்தவரை கீழே தள்ளிவிட்டு திருடிச் சென்ற மர்ம நபர்!
பழனி அருகே மது போதையில் இருசக்கர வாகனத்தின் மீது படுத்திருந்த நபரை, மர்ம நபர் ஒருவர் கீழே தள்ளிவிட்டு பைக்கை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: அஜ்மீர் ராஜா
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோதைமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையின் முன்புறம் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தின் மீதே படுத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர், இருசக்கர வாகனத்தின் மீது படுத்திருந்தவரை வாகனத்துடன் கீழே தள்ளி விட்டு இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றார்.
Bike theftpt desk
இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பழனி நகர போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.