தீக்குச்சிகளால் மாற்றுத்திறனாளி மாணவர் உருவாக்கிய ஓவியம்pt desk
தமிழ்நாடு
சேலம்: கமல்ஹாசன் 70வது பிறந்தநாள் - தீக்குச்சிகளால் மாற்றுத்திறனாளி மாணவர் உருவாக்கிய ஓவியம்
நடிகர் கமல்ஹாசனின் 70 ஆவது பிறந்தநாளையொட்டி சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் தீக்குச்சிகளால் கமல்ஹாசன் உருவத்தை தத்ரூபமாக உருவாக்கி கவனம் ஈர்த்துள்ளார்.
செய்தியாளர்: மோகன்ராஜ்
சேலம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஓவிய கலைஞரான ரவிக்குமார், நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகராவார். கமல்ஹாசனின் ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் அவரின் உருவத்தை வித்தியாசமான முறையில் ஓவியமாக வரைந்து அதனை பிறந்தநாள் பரிசாக அவரை நேரில் சந்தித்து வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
தீக்குச்சிகளால் மாற்றுத்திறனாளி மாணவர் உருவாக்கிய ஓவியம்pt desk
இந்நிலையில், இந்த ஆண்டு நாளை (நவம்பர் 7ம் தேதி) தனது 70 வது பிறந்த நாளை கொண்டாட உள்ள கமல்ஹாசனுக்கு ரவிக்குமாரின் மகன் சஞ்சய்குமார் தந்தையை போலவே பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 3500 தீக்குச்சிகளைக் கொண்டு கமல்ஹாசன் உருவத்தை தத்ரூபமாக உருவாக்கியுள்ளார்.
தெலுங்கு மக்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் கஸ்தூரி.. 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
வாய் பேச முடியாத மாற்றுதிறனாளியான சஞ்சய்குமார் 22 மணி நேரம் செலவழித்து உருவாக்கிய இந்த படைப்பை, கமல்ஹாசனை நேரில் சந்தித்து பிறந்தநாள் பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவிக்க திட்டமிட்டுள்ளார்.