\
நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரிபுதியதலைமுறை

தெலுங்கு மக்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் கஸ்தூரி.. 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

இந்து மக்கள் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் நடிகை கஸ்தூரியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
Published on: 

இந்து மக்கள் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் கஸ்தூரியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதில் அவர் தெலுங்கு இன மக்கள் குறித்து அவதூராக பேசியதாக தேனி காவல் நிலையத்தில் பெண்கள் புகார் மனு அளித்தனர்.

இந்நிலையில், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து தனது எக்ஸ்வலைதளப் பக்கத்தில், ”சென்னையில் நவம்பர் 3ம் தேதி தெலுங்கு மக்கள் குறித்து பேசிய கருத்துகளை திரும்பப் பெறுகிறேன். தெலுக்கு மக்களை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை” என்று தனது எக்ஸ் பக்கத்தில் கஸ்தூரி பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசுவது உள்ளிட்ட 4 பிரிவுகளில் எழும்பூர் போலீசார் நடிகை கஸ்தூரி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மதம், இனம் குறித்து இருவேறு மக்களிடையே பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாகவும் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அமைப்பு கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com