தருமபுரி: சேற்றில் சிக்கிய கால்கள்.. ஈமச் சடங்கில் பங்கேற்க வந்த இரு இளைஞர்கள் உயிரிழந்த சோகம்!

ஈமச் சடங்கிற்கு வந்த இரு இளைஞர்கள் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tragedy
Tragedypt desk

செய்தியாளர்: கணேஷ்

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த ஜடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ் என்பவரின் மனைவி தமிழரசி கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது ஈமச்சடங்கிற்கு 50க்கும் மேற்பட்ட உறவினர்கள் நேற்று மாலை மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றிற்கு வந்து ஈமச்சடங்கை முடித்துவிட்டு திரும்பியுள்ளனர்.

death
deathpt desk

அப்போது முரளிதரன் என்பவரது இளைய மகன் ஜெயராஜ் (22), பாலகிருஷ்ணன் என்பவரது மகன் கார்த்திகேயன் (23) மற்றும் அன்சர் என்பவரது மகன் அக்மல் (23) ஆகிய மூன்று பேரும் சிறிது நேரம் குளித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்துவிடுவதாக கூறிவிட்டு ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஜெயராஜ் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் சகதியில் சிக்கி மூச்சடைத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Tragedy
விருதுநகர்: சார்ஜ் போட்ட படி லேப்டாப்பை பயன்படுத்திய இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினர் மற்றும் பாரூர் காவல் துறையினரும் இரு உடல்களையும் மீட்டனர். இச்சம்பவம் குறித்து பாரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com