விருதுநகர்: சார்ஜ் போட்ட படி லேப்டாப்பை பயன்படுத்திய இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

ராஜபாளையம் அருகே லேப்டாப் சார்ஜ் போட்ட படி பயன்படுத்திய இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tragedy
Tragedypt desk

செய்தியாளர்: K.கருப்பஞானியார்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த ராஜாராம் என்பவரது மனைவி செந்தி மயில் (22). இருவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில், தற்போது ராஜாராம் துபாயில் பணிபுரிந்து வருகிறார்.

Tragedy
Tragedypt desk

இந்நிலையில், செந்தி மயில், நேற்று மாலை தனது லேப்டாப்பை சார்ஜ் போட்ட படி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது லேப்டாப் வயரில் இருந்து திடீரென அவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. சத்தம் கேட்டு வந்த அவரது தந்தை சக்தி குமார், அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Tragedy
அரியலூர்: துணியில் சுற்றப்பட்டு வாளி நீரில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பச்சிளங் குழந்தை

தகவல் அறிந்து வந்த சேத்தூர் காவல் துறையினர் இளம் பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இளம் பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சொக்கநாதன் புத்தூர் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com