\
Dhanush Fans Club Women Leaders Gifted Silver Lamps
தனுஷ் நற்பணி இயக்க பெண் நிர்வாகிகள்Pt web

தனுஷ் நற்பணி இயக்கம்.. பெண் நிர்வாகிகள் சந்திப்பு.. காமாட்சி விளக்கு பரிசு!!

தனுஷ் நற்பணி இயக்க மகளிர் நிர்வாகிகள் கூட்டத்திற்கு வந்த பெண் நிர்வாகிகளுக்கு வெள்ளி காமாட்சி விளக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
Published on: 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், கடந்த ஓராண்டாகத் தமிழகம் முழுவதும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார். ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்துவது, நலத்திட்டப் பணிகளை விரிவுபடுத்துவது, மன்றத்தில் பெண் நிர்வாகிகளை அதிக அளவில் இணைப்பது உள்ளிட்ட பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

தனது பிறந்தநாளுக்கு முன்பு நடைபெற்ற பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தனுஷ் பேசியது, அவரது அரசியல் வருகைக்கான முன்னெடுப்பாக இருக்கலாம் என்ற விவாதத்தை ஏற்படுத்தியது. அரசியல் கட்சியை எப்போது தொடங்குவீர்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் அவர் பதிலளிக்காமல் சிரித்தபடி சென்றார்.

Dhanush
DhanushANI

இதற்கிடையே, சமீபத்தில் கோவையில் நடைபெற்ற ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில், தனுஷ் ரசிகர் மன்றம் இனி இயக்கமாகச் செயல்படும் என அதன் தலைவர் சுப்பிரமணிய சிவா அறிவித்ததுடன், இயக்கத்தின் லோகோவையும் வெளியிட்டார். தனுஷ் அரசியலில் இறங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் டெல்லி சென்றது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது.

இந்தச்சூழலில் தான், தனுஷ் நற்பணி இயக்கத்தின் பெண் நிர்வாகிகள் சந்திப்பு இன்று சென்னை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில், 3 ஆயிரம் பெண் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், நிர்வாகிகள் ஒவ்வொருவருடனும் நடிகர் தனுஷ் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து, நிர்வாகிகள் அனைவருக்கும் வெள்ளியால் செய்யப்பட்ட காமாட்சி ஒன்று பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.

Dhanush Fans Club Women Leaders Gifted Silver Lamps
அதிக வருவாய் ஈட்டும் 10 கோயில்கள்.. ரூ.233 கோடியுடன் முதலிடத்தில் பழனி முருகன் கோயில்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com