\
பழனி முருகன் கோவில்
பழனி முருகன் கோவில்கோப்புப் புகைப்படம்

அதிக வருவாய் ஈட்டும் 10 கோயில்கள்.. ரூ.233 கோடியுடன் முதலிடத்தில் பழனி முருகன் கோயில்!

தமிழகத்தில் அதிக வருமானம் ஈட்டும் கோயிலாக முதலிடத்தில் பழனி முருகன் கோவில் இருக்கிறது.
Published on: 
Summary

தமிழகத்தில் அதிக வருமானம் ஈட்டும் முதல் 10 கோயில்களில், பழனி முருகன் கோயில் 233 கோடி ரூபாயுடன் முதலிடம் பிடித்துள்ளது..

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், அதிக வருமானம் ஈட்டும் முதல் 10 முன்னணி கோயில்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாநிலத்தில் உள்ள முதல் 10 கோயில்களின் ஒட்டுமொத்த ஆண்டு வருமானம் 942 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வருமானத்துடன் அருணாச்சலேஸ்வரர் கோயில் 139 கோடி ரூபாயுடன் இரண்டாம் இடத்திலும், திருச்செந்தூர் கோயில் 131 கோடி ரூபாயுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்கோப்புப் புகைப்படம்

பிரசித்திபெற்ற திருத்தணி கோயில் 75 கோடி ரூபாயுடன் 5ஆம் இடத்திலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 6ஆம் இடத்திலும் உள்ளன. இதேபோல், ஈரோடு பண்ணாரி அம்மன் கோயில் 29 கோடி ரூபாய் வருவாயுடன் 10ஆம் இடத்தில் உள்ளது. அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாடுகள், அன்னதான திட்டங்கள் மற்றும் தூய்மைப் பணிகளுக்காக வருவாய் முழுமையாக பயன்படுத்தப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பழனி முருகன் கோவில்
SUPER STAR-ருக்காக தனி கோவில்.. 230 ரஜினி கொலு பொம்மைகள்! ரசிகர் செய்த தரமான சம்பவம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com