\
தமிழகத்தில் பெய்யும் தொடர் மழை -  மகிழ்ச்சியில் டெல்டா விவசாயிகள்

தமிழகத்தில் பெய்யும் தொடர் மழை - மகிழ்ச்சியில் டெல்டா விவசாயிகள்

தமிழகத்தில் பெய்யும் தொடர் மழை - மகிழ்ச்சியில் டெல்டா விவசாயிகள்
Published on: 

தமிழகத்தில் பெய்துவரும் தொடர் மழையால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் இன்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர். புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் 2 நாட்களாக மண் குளிர்ந்து, மக்கள் மகிழும் வகையில் மழை பெய்துவருகிறது.

நாகை மாவட்டத்தில் 3 நாட்களாக மழை தொடர்கிறது. தருமபுரி மாவட்டம் அரூர், மொரப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி,மின்னலுடன் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடும் குளிரின் ஊடே பலத்த மழையும் பெய்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் சற்று சிரமமடைந்தாலும், மழையின் அழகை மலையிலிருந்து ரசிக்கவும் செய்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com