amit shah in delimitation debate
amit shah in delimitation debateweb

தொகுதி மறுவரையறை| தென் மாநிலங்களுக்கு எத்தனை சீட்? லிஸ்ட்டோடு சொன்ன அமித் ஷா!

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு எத்தனை சீட்கள் கூடும் என்ற லிஸ்ட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
Published on
Summary

மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் விவாதத்தில் அமித்ஷா, தென் மாநிலங்கள் தவறான நரேட்டிவ் பரப்புவதாக குற்றம்சாட்டி, தரவுகளுடன் விளக்கம் அளித்தார். தொகுதி மறுவரையறைக்கு பின் தமிழ்நாட்டுக்கு 39 இடம் 59 ஆக, கேரளா 20-இல் இருந்து 30, ஆந்திரா 25-இல் இருந்து 38, கர்நாடகா 28-இல் இருந்து 42 ஆக உயரும் என்றும், தென் மாநிலங்களுக்கு இழப்பு ஏதுமில்லை என்றார்.

செய்தியாளர் - விக்னேஷ்

மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுசீரமைப்பு மசோதக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த மசோதா மீதான விவாதம் அவையில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பிரதமர் மோடியும் பேசினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது, தொகுதி வரையறை மூலம் 850 தொகுதிகளாக அதிகரிக்கப்படும் போது எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு கூடும் என்பது தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

குறிப்பாக தென் மாநிலங்கள் இந்த விவகாரத்தை வைத்து தவறான நெரேட்டிவை பரப்புகின்றன என்று கூறி தரவு ஒன்றையும் வெளியிட்டார். அப்போது, தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களுக்கும் பலனே கிடைக்கும் என்றார். இது தொடர்பாக தரவுகளை பகிர்ந்த அமித்ஷா, தென் மாநிலங்களுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் என்பதையும் கூறினார்.

தொகுதி மறுவரையறை
தொகுதி மறுவரையறை

இது குறித்து அமித்ஷா கூறுகையில், "தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 20 இடங்களும், கேரளாவிற்கு கூடுதலாக 10 தொகுதிகளும், தெலுங்கானாவிற்கு கூடுதலாக 9 மற்றும் ஆந்திராவிற்கு கூடுதலாக 13 சீட்களும் கிடைக்கும் என்றார். மகாராஷ்டிராவிற்கு கூடுதலாக 24 சீட்கள் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

அதவாவது தமிழ்நாட்டிற்கு தற்போது 39 இடங்கள் உள்ள நிலையில் தொகுதி மறுவரையைறைக்கு பின்னர் 59 ஆகவும், கேரளாவில் 20 தொகுதிகளானது தற்போது உள்ளது 30 தொகுதிகளாகவும், ஆந்திராவில் 25 தொகுதிகள் 38 ஆகவும், கர்நாடகாவில் 28-ல் இருந்து 42 ஆகவும் உயரும் என்றார். மக்களவையில் பேசிய அமித்ஷா, தமிழகத்திற்கு எந்த வித இழப்பும் ஏற்படாது. மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநித்துவம் 7.23 சதவீதம் ஆக அதிகரிக்கும்.

amit shah in delimitation debate
தொகுதி மறுவரையறை மசோதா என்றால் என்ன..? ஸ்டாலின் எதிர்ப்பது ஏன்..? நாளை கருப்பு கொடி போராட்டம்!

தென் மாநிலங்களில் மட்டும் தற்போது 129 தொகுதிகள் உள்ளன. இதன் தற்போதைய சதவீதம் 23.76 சதவீதமாக உள்ளது. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு தென் மாநிலங்களில் ஒட்டு மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 23.87 சதவிகிதமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். முந்தைய அட்சியில் தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தில் என்ன இருந்ததோ அதையேதான் நாங்கள் கொண்டு வந்து இருக்கிறோம் அதில் ஒரு புள்ளியை கூட நாங்கள் மாற்றவில்லை எனவும் அமித்ஷா கூறினார்.

தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முக ஸ்டாலின் எதிர்ப்பு
தொகுதி மறுவரையறை மசோதா - ஸ்டாலின்web

எனவே, தொகுதி மறுசீரமைப்பு காரணமாக தென் மாநிலங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது, மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செய்த தென் மாநிலங்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள். தமிழ்நாட்டில் தேர்தலின் போது இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது என்று கவலைப்படுகிறார்கள்.

தொகுதி மறுவரையறை ஆணையத்தின் அறிக்கை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் பெற்ற பிறகே அமல்படுத்தப்படும். 2029 க்கு முன் அது நிறைவேற்றப்படும் என்று எந்த கேள்வியும் இல்லை. அதுவரையில் நடைபெறும் எல்லா தேர்தல்களும் தற்போது இருக்கும் இடங்களின் எண்ணிக்கையிலையே நடைபெறும்" என்று கூறினார்.

amit shah in delimitation debate
தொகுதி மறுவரையறை| “39 தொகுதிகள் 32ஆக குறையும்போது..” எச்சரிக்கும் பா.சிதம்பரம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com