“ஜீரணிக்க முடியாத மரணம்..” - வேதனை பொங்க சொன்ன நடிகர் டெல்லி கணேஷ்!

”அவர் சம்பாதித்தது பணம் இல்லை. மக்களின் நல்ல மனம்” - என்று மன வேதனையோடு மறைந்த விஜயகாந்த்தின் உடலுக்கு இரங்கல் தெரிவித்தார் நடிகர் டெல்லி கணேஷ்.
நடிகர் டெல்லி கணேஷ்
நடிகர் டெல்லி கணேஷ்புதிய தலைமுறை

நடிகர் டெல்லி கணேஷ், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர் மத்தியில் பேசிய அவர், “அவர் சம்பாதித்தது பணம் இல்லை. மக்களின் நல்ல மனம்” - என மன வேதனையோடு பேசினார்.

மேலும் விஜயகாந்தின் இழப்பினை பற்றி பேசிய டெல்லி கணேஷ், “உலகம் புகழும் நல்ல கலைஞராக, நல்ல மனிதராக, அனைவரையும் அரவணைக்கும் தன்மையோடு பழகிய மாபெரும் மனிதர்தான் விஜயகாந்த். இம்மாதிரியான கூட்டத்தினை சென்னையில் காண முடியாத அளவிற்கு உங்கள் அனைவரையும் சம்பாதித்து வைத்துள்ளார்.

அவர் சம்பாதித்தது பணம் இல்லை. மக்களின் நல்ல மனம். இன்று அவர் உயிரோடு இருந்தால் நடிகர் சங்க கட்டடம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும்.

நடிகர் டெல்லி கணேஷ்
RIP Vijayakanth | “காலன் கொடியவன் என்றுதான் சொல்லவேண்டும்” - பாரிவேந்தர் MP

ஜீரணிக்க முடியாத மரணம், தாங்க முடியாத துயரம். இவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com