\
 IJK நிறுவனத் தலைவர் பாரிவேந்தர்
IJK நிறுவனத் தலைவர் பாரிவேந்தர்புதிய தலைமுறை

RIP Vijayakanth | “காலன் கொடியவன் என்றுதான் சொல்லவேண்டும்” - பாரிவேந்தர் MP

'என் அன்பு நண்பர் விஜயகாந்தின் இழப்பு தமிழ் திரையுலகிற்கும், அரசியலுக்கும், நாட்டுக்கும் மிகப்பெரிய இழப்பு' என்று மக்களவை உறுப்பினர் பாரிவேந்தர் தனது இரங்கலை நேற்று பதிவு செய்த நிலையில் தற்போது நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
Published on

“என் அன்பு நண்பர் விஜயகாந்தின் இழப்பு தமிழ் திரையுலகிற்கும், அரசியலுக்கும், நாட்டுக்கும் மிகப்பெரிய இழப்பு” என்று மக்களவை உறுப்பினர் பாரிவேந்தர் தனது இரங்கலை நேற்று பதிவு செய்த நிலையில் தற்போது நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அங்கு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், “இவரின் மறைவு என்பது திரையுலகம், தமிழ்நாடு என்று மொத்த மக்களுக்கும் பேரிழப்பு. அவர் குழந்தை போல மனம் கொண்டவர். என்னை பார்க்கும் போது அண்ணா என்று அன்போடு அழைப்பார். தேர்தலின் போது எனக்காக வாக்குகள் சேகரிக்க பிரசாரம் செய்தார். இப்படிபட்ட பெருமைக்குரிய மகன் இன்று இல்லை.

 IJK நிறுவனத் தலைவர் பாரிவேந்தர்
RIP VIJAYAKANTH | “அவர் உடல் நலத்துடன் இருந்திருந்தால்” உருக்கமாக பேசிய சீமான்

ஒரு மனிதனின் தன்மை, குணம், நேசம் எதை வைத்து தெரியும் என்றால் வாழ்கிற காலத்தினை காட்டிலும் அவர் மறைந்த நேரத்தில் அப்பெருமகனாருக்கு மக்கள் எப்படி சாரைசாரையாக வந்து அஞ்சலி செலுத்துகின்றனர் என்பதை வைத்தே தெரியும். அதுவும் ஒரு குறியீடாகும்.

அந்தவகையில் மக்கள் இன்று கண்ணீரோடு அஞ்சலி செய்ய கூடுகிறார்கள். காலன் கொடியவன் என்றுதான் நான் சொல்லவேண்டும்” என்று தனது இரங்கலை தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com