\
கார்டன் எங்களுக்கே சொந்தம்: தீபக்

கார்டன் எங்களுக்கே சொந்தம்: தீபக்

கார்டன் எங்களுக்கே சொந்தம்: தீபக்
Published on

போயஸ் கார்டன் இல்லம் எங்களுக்கே சொந்தம் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார். 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்துக்கு இன்று வந்தார். சகோதரர் தீபக்கின் அழைப்பின் பேரிலேயே அங்கு வந்ததாகவும், ஆனால் தினகரன் ஆதரவாளர்கள் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்றும் தீபா குற்றம்சாட்டினார். 
இதுதொடர்பாக புதியதலைமுறையிடம் தொலைபேசி வாயிலாக பேசிய தீபக், போயஸ் கார்டன் இல்லம் எனக்கும், தீபாவுக்குமே சொந்தம் என்று தெரிவித்தார். போயஸ்கார்டன் இல்லத்துக்கு வந்த தீபாவை யாரும் தடுக்கவில்லை என்று கூறிய தீபக், அவரை போயஸ் இல்லத்துக்கு வருமாறு நான்தான் அழைத்தேன் என்றும் கூறினார். போயஸ் இல்லம் வந்த தீபா, ஜெயலலிதாவின் படத்துக்கு மரியாதை செலுத்தியதாகவும் தீபக் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com