\
போயஸ் கார்டன் எங்களுக்கே சொந்தம்: தீபக்

போயஸ் கார்டன் எங்களுக்கே சொந்தம்: தீபக்

போயஸ் கார்டன் எங்களுக்கே சொந்தம்: தீபக்
Published on

ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவிடமாக்கும் முன்பு, சட்டப்படி எங்களின் கருத்தை கேட்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்றும் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லம் அவரது நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீடு நினைவு இல்லமாக மாற்றப்படுவதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில அவரது சகோதரர் தீபக் முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவிடமாக்கும் முன்பு, எங்கள் கருத்தை கேட்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் தாயாரும், தங்களின் பாட்டியுமான சந்தியாவின் உயில்படி வேதா இல்லம் தனக்கும், தீபாவுக்குமே சொந்தம் எனவும் தீபக் கூறியுள்ளார். 
ஜெயலலிதாவின் நினைவிடமாக்க வேதா‌ இல்லத்தை வழங்க தாங்கள் தயாராக இருந்தாலும், அரசு சட்டமுறைகளை பின்பற்றியே அதை நிறைவேற்ற வேண்டும் என தீபக் வலியுறுத்தியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com