புயலாக வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை மையம்

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
sea
seapt desk

வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றது. இந்த புயலானது நாளை (18.11.23) அதிகாலை வங்கதேச கடற்கரையையொட்டி நகர்ந்து மோங்லா - கேப்புபாராவு பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain
Rain pt desk

ஒடிசாவில் இருந்து 190 கிமீ தொலைவில் கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ள நிலையில் 20 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் நாளை (18.11.23) அதிகாலை வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலுக்கு மிதிலி என பெயரிடப்பட்ட நிலையில், இலங்கையையொட்டிய வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு, புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

sea
ஹமாஸின் முக்கிய தலைவர் வீட்டில் இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதல்.. உள்ளே இருந்தது என்ன?

இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com