ஹமாஸின் முக்கிய தலைவர் வீட்டில் இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதல்.. உள்ளே இருந்தது என்ன?

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் வீட்டில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹமாஸ் இஸ்ரேல் போர்
ஹமாஸ் இஸ்ரேல் போர்புதிய தலைமுறை

காஸாவின் மிக முக்கிய மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனையில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் முகாம் அமைத்து செயல்படுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில் தரைவழியாக காஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேலிய ராணுவ படையினர் அல்-ஷிபா மருத்துவமனையை சுற்றிவளைத்தனர்.

al-shifa hospital
al-shifa hospitalpt desk

இதையடுத்து அல்-ஷிபா மருத்துவமனையில் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்திய சுரங்கப் பாதை கண்டறியப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்திய துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஹமாஸ் இஸ்ரேல் போர்
யாசர் அராஃபத்தின் நினைவுச் சின்னத்தை அழிக்கும் இஸ்ரேல்... வெளியான வீடியோ!

இதனிடையே, ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதியாக பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேலிய பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே வீட்டில் தாக்குதல் நடத்திய ட்ரோன் காட்சியை இஸ்ரேல் படையினர் வெளியிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com