மிக்ஜாம் புயலால் ஸ்தம்பித்த சென்னை; ரத்து செய்யப்பட்ட விமானங்கள், ரயில்கள் முழுவிபரம்

மிக்ஜாம் புயல் எதிரொலி காரணமாக சென்னையில் இருந்து மதுரைக்கு வரவேண்டிய இரண்டு இண்டிகோ விமானங்கள் மற்றும் பிற இடங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புயல் காரணமாக விமானங்கள், ரயில்கள் ரத்து
புயல் காரணமாக விமானங்கள், ரயில்கள் ரத்துpt web

மேலும் துபாயிலிருந்து மதுரை வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானமும் 6 மணி நேரம் தாமதமாக மாலை 6:30 மணியளவில் மதுரை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து மதுரை வரும் இண்டிகோ விமானங்கள் இரண்டு மிக்ஜாம் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை பகுதியில் புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருவதால் வானிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை வரும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்pt web

இதனால் மதுரையிலிருந்து பகல் 10:20 மணிக்கு மற்றும் 11 40 மணியளவில் சென்னை செல்ல வேண்டிய பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் துபாயில் இருந்து மதுரை வரும் ஸ்பைஸ் ஜெட் விமானம் பகல் 12 30 மணியளவில் வழக்கமாக மதுரை விமான நிலையம் வந்தடையும்.

தற்பொழுது துபாயிலும் பலத்த மழை பெய்து வருவதால் ஸ்பைஸ் ஜெட் விமானம் ஆறு மணி நேரம் தாமதமாக மாலை 6:30 மணி அளவில் மதுரை வந்தடையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரத்தான ரயில்களின் விபரம்

கனமழை காரணமாக பிற இடங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில் எண்- 22672 மதுரை - சென்னை எக்மோர் தேஜஸ் விரைவு வண்டி

ரயில் எண்- 22650 ஈரோடு - சென்னை செண்ட்ரல் ஏற்காடு அதிவிரைவு வண்டி (SF Express)

ரயில் எண்- 22652 பாலக்காடு - சென்னை செண்ட்ரல் அதிவிரைவு வண்டி

ரயில் எண்- 12658 KSR பெங்களூரு - சென்னை செண்ட்ரல் அதிவிரைவு வண்டி

ரயில் எண்- 22640 ஆழப்புழா - சென்னை செண்ட்ரல் அதிவிரைவு வண்டி

ரயில் எண்- 12602 மங்களூர் செண்ட்ரல் - சென்னை செண்ட்ரல் மெயில்

ரயில் எண்- 12672 மேட்டுப்பாளையம் - சென்னை செண்ட்ரல் Blue Mountain Express

ரயில் எண் - 16022 மைசூரு - சென்னை செண்ட்ரல் காவேரி எக்ஸ்பிரஸ்

ரயில் எண் - 12674 கோயம்புத்தூர் ஜங்சன் - சென்னை செண்ட்ரல் சேரன் அதிவிரைவு வண்டி

ரயில் எண் - 17652 கச்செங்குடா - செங்கல்பட்டு விரைவுவண்டி

ரயில் எண் - 12624 திருவனந்தபுரம் செண்ட்ரல் - சென்னை செண்ட்ரல் மெயில்

ரயில் எண் - 16090 ஜோலார் பேட்டை - சென்னை செண்ட்ரல் ஏலகிரி விரைவு வண்டி

ரயில் எண் - 22159 மும்பை CSMT - சென்னை செண்ட்ரல் அதிவிரைவு வண்டி

ரயில் எண் - 12608 KSR பெங்களூரு - சென்னை செண்ட்ரல் Lalbagh விரைவு வண்டி

ரயில் எண் - 16204 திருப்பதி - சென்னை செண்ட்ரல் Garudadri விரைவு வண்டி

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில் எண் - 20644 கோயம்புத்தூர் - சென்னை செண்ட்ரல் வந்தேபாரத் விரைவு வண்டி

ரயில் எண் - 16054 திருப்பதி - சென்னை செண்ட்ரல் சப்தகிரி விரைவு வண்டி

ரயில் எண் - 12680 கோயம்புத்தூர் - சென்னை செண்ட்ரல் Intercity விரைவு வண்டி

ரயில் எண் - 12610 மைசூரு - சென்னை செண்ட்ரல் அதிவிரைவு வண்டி

ரயில் எண் - 22179 மும்பை LTT - சென்னை செண்ட்ரல் Weekly அதிவிரைவு வண்டி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com