கடலூரில் மத்தியக்குழு ஆய்வு
கடலூரில் மத்தியக்குழு ஆய்வுpt web

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு | 1 லட்சத்து 95 ஆயிரம் குடும்பங்கள்.. கடலூரில் மத்தியக் குழு இன்று ஆய்வு..

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் நேரிட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து கடலூர், புதுச்சேரியில் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Published on

ஃபெஞ்சல் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து மதிப்பிடுவதற்காக, மத்திய உள்துறை அமைச்சக பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையில் 7 பேர் கொண்ட மத்தியக் குழு தமிழகம் வந்துள்ளது. இந்தக் குழுவினர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

அய்யன்கோவில்பட்டு பகுதியில் நெடுஞ்சாலை பாதிப்பு குறித்து ஆய்வு செய்த பின், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். அதில், மாவட்டம் முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, புகைப்படங்கள் மூலம் விளக்கப்பட்டன.

7/12/24 அன்று செய்யப்பட்ட ஆய்வு
7/12/24 அன்று செய்யப்பட்ட ஆய்வு

அரகண்டநல்லூரில் மத்திய உள்துறை அமைச்சகப் பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையில் மத்திய குழுவினரும், தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளும் புயல் சேதத்தை பார்வையிட வந்தபோது, அவர்களை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு, கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கடலூரில் மத்தியக்குழு ஆய்வு
”சினிமாவில் நடிக்கலாம் ஆனால், நிஜ வாழ்க்கையில் நடிக்க முடியாது” - விஜயை விமர்சித்த அமைச்சர் ரகுபதி

அரசூர், இருவேல்பட்டு, திருவெண்ணைநல்லூர், சிறுமதுரை, திருக்கோவிலூர் பகுதிகளிலும் ராஜேஷ் குப்தா தலைமையிலான மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர். அதேபோன்று, மத்திய விவசாய மற்றும் உழவர் நலத்துறை இயக்குனர் பொன்னுசாமி தலைமையிலான மற்றொரு குழுவினர், வைலாமூர், கருங்காலிப்பட்டு, சென்னாகுனம், அரகண்டநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களில், பயிர் சேதம் குறித்தும், தென்பெண்ணையாற்றின் கரையோர பகுதி பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்து, வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மீட்கபட்டவர்களிடம் விசாரித்தனர்.

ஃபெஞ்சல் புயல்
ஃபெஞ்சல் புயல்முகநூல்

புயல் வெள்ள பாதிப்பு குறித்து பேரிடர் மற்றும் வருவாய் துறை முதன்மை செயலர் அமுதா ஒரு குழுவினருக்கும், மற்றொரு குழுவிற்கு வருவாய் துறை ஆணையர் ராஜேஷ் லக்கானி, மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோரும் விளக்கி கூறினர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலினால் 240 கிராமங்களும், விழுப்புரம் நகரப்பகுதிகளும் பாதிப்படைந்தன. விளைநிலங்களை பொறுத்தவரை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 9 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் 80,570 ஹெக்டேர் பாதிப்படைந்தன. மாவட்டம் முழுவதும் 75 சதவிகிதம் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளன.

கடலூரில் மத்தியக்குழு ஆய்வு
மதுரை | இன்று நடக்கவிருந்த நிகழ்வு.. திருமாவளவன் கட்சிக் கொடியேற்ற அனுமதி மறுப்பு - காரணம் என்ன?

அதேபோல், கடலூர் மாவட்டமும் புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 95 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரைகள் உடைந்தது; சாலைகளை புயல் விழுங்கி சென்றது; ஆடு மாடு கோழி என பலவற்றின் உயிரை பறித்தது; ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தது விவசாய நிலங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுத்தியது.

FengalCyclone
FengalCyclone

இந்நிலையில், மத்தியக் குழு கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்டனர். குறிப்பாக தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள மேல்பட்டாம்பாக்கம், அழகிய நத்தம் மற்றும் விளைநிலங்கள், வீடுகளை ஆய்வு செய்தனர். வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். புயல் பாதிப்பு தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் மத்தியக் குழு பங்கேற்கவுள்ளது. அதன் பின், புதுச்சேரி மாநிலத்தில் வெள்ள பாதிப்பு குறித்து இன்று மாலை ஆய்வு செய்ய உள்ளனர்.

கடலூரில் மத்தியக்குழு ஆய்வு
நோயுடன் போராடும் வினோத் காம்ப்ளிக்கு உதவ தயார்.. ஆனால் ஒரு நிபந்தனை! சக வீரர்களின் கோரிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com