தமிழ்நாடு
Cyclone Fengal | எண்ணூரில் கொட்டித் தீர்த்த கனமழை - 15 அடி உயரத்திற்கு எழும் கடல் அலை
ஃபெஞ்சல் புயலால் எண்ணூரில் 13 செ.மீ. மழை பெய்தது. 15 அடி உயரத்திற்கும் மேலாக எழும் கடல் அலை. கடற்கரை சாலையில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்
செய்தியாளர்: எழில்
ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எண்ணூரில் பலத்த மழை பெய்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. எர்ணாவூர் பாரதியார் நகரில் கடற்கரை சாலையில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகளும் பொது மக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
15 அடி உயரத்திற்கு எழும் கடல் அலைpt desk
ஒருபுறம் கடல் ஆக்ரோஷமாக 15 அடிக்கும் மேல் எழுந்து ஆர்ப்பரிக்கிறது. மறுபுறம் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. டிராக்டரில் மோட்டார் பொருத்தி தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றி கடலில் விடும் நடவடிக்கையில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் ஆபத்தை உணராமல் உயரே எழும்பும் கடல் அலைகளை செல்பி எடுப்பவர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.