“நான் ஏற்கனவே ஹார்ட் பேஷண்ட்.. இப்படியா பண்றது” மின் வயர் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஆன்லைனில் மின் வயர் ஆர்டர் செய்தவருக்கு, காலி மதுபாட்டில் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் நாகையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
wayar
wayarfile image

நாகை மாவட்டம், வேதாரண்யம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவர் கடந்த 18-ம் தேதி பிரபல ஆன்லைன் வணிக நிறுவனத்தில் ஆன்லைனில் வீட்டுக்கு தேவையான மின்சார வயரை ஆர்டர் செய்துள்ளார். மேலும் அதற்கான தொகை ரூ 990 ஐ கடந்த 21ம் தேதி ஆன்லைனில் செலுத்தி உள்ளார்

முதியவர் வேலாயுதம்
முதியவர் வேலாயுதம்

இந்த நிலையில், நேற்று மாலையில் பிரபல ஆன்லைன் வணிக நிறுவனத்திலிருந்து பார்சல் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. பார்சலை கொடுத்துவிட்டு டெலிவரி பாய் சென்றுவிட்ட நிலையில், அதனை வாங்கி வீட்டில் வைத்துவிட்டு மற்ற பணிகளில் பிசியாக இருந்துள்ளார் வேலாயுதம். இதனைத் தொடர்ந்து, இரவான பிறகு பார்சலை திறந்து பார்த்தவர் அதிர்ந்து போயுள்ளார். காரணம், மின் வயருக்கு பதிலாக பார்சலில் காலி மதுபாட்டில் இருந்துள்ளது.

wayar
நரகமாகும் காஸா.. தண்ணீர் இன்றி தவிக்கும் பாலஸ்தீனர்கள்.. வன்மத்தோடு கைத்தட்டி சிரிக்கும் இஸ்ரேல்!

சம்பவம் குறித்து பேசிய அவர், “இதுவரை தான் எத்தனையோ முறை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளேன். ஆனால் எப்போதும் இதுபோன்று ஆனதில்லை. தற்போது மக்களிடையே ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் மோகம் அதிகரித்து வரும் சூழலில் இப்படி ஏமாற்றுவதா?

முதியவர் வேலாயுதம்
முதியவர் வேலாயுதம்

எனக்கு வந்த பார்சலை திறந்து பார்த்து அதிர்ந்து மயங்கிவிட்டேன். நான் ஏற்கனவே ஒரு இதயநோயாளி. இப்படியா ஏமாற்றுவது? இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆன்லைன் வணிக நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

wayar
சேலம்: “வீட்டுக்கு வந்து பணம் கேட்பியா..?” மாதத்தவணை கேட்ட பைக் ஷோ ரூம் ஊழியர் மீது கொடூர தாக்குதல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com