சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்pt desk
தமிழ்நாடு
கடலூர் | நண்பர்களுடன் குளத்தில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
கடலூரில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: ஸ்ரீதர்
கடலூர் நகர பகுதியில் நத்தவெளியில் உள்ள குளத்தில் ஐந்து சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். இதில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் சேற்றில் சிக்கிக் கொண்டதால் அவர்களை மீட்க மற்றவர்கள் முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அருகில் இருந்தவர்கள் இரண்டு சிறுவர்களையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Deathpt desk
அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து உயிரிழந்த சிறுவர்கள் அரிசி பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த சரவண பாலாஜி மற்றும் ஸ்ரீஹரன் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கடலூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.