போலீசார் விசாரணைpt desk
தமிழ்நாடு
வெட்டுக் காயங்களுடன் சாலையோரம் சடலமாக கிடந்த இளைஞர் - போலீசார் விசாரணை
சேலையூரில் இளைஞர் ஒருவரை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை தாம்பரம் சேலையூர் அடுத்த மப்பேடு ஆலப்பாக்கம் சாலையோரம் ஒருவர் சடலமாக கிடப்பதாக சேலையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சேலையூர் போலீசார், பள்ளிகரணை துணை ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்த்துள்ளனர். அப்போது, தலை, வெட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார்.
DeathFile Photo
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த நபர் சேலையூரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன சூர்யா (25) என்பதும், வாய் பேசமுடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி என்பது தெரியவந்துள்ளது. இவரை கொலை செய்தது யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.