கடலூர்: முந்திரி காட்டில் கண்டெடுக்கப்பட்ட பெண் எலும்புக்கூடு - அதிர்ச்சியில் கிராம மக்கள்!

வனத் துறைக்குச் சொந்தமான முந்திரி காட்டில் பெண் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊ.மங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Villagers
Villagerspt desk

செய்தியாளர்: கே.ஆர்.ராஜா

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கிழக்கு இருப்பு கிராமத்தில் உள்ள வனத் துறைக்குச் சொந்தமான முந்திரி காட்டில் உள்ள மரத்தின் அடிப்பகுதியில் எலும்புக்கூடு கிடப்பதாகவும் அதற்கு அருகிலே சேலை இருப்பதாகவும் ஊ.மங்கலம் காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர்.

Police station
Police stationpt desk

தகவலின் பேரில் அங்கு சென்ற ஊமங்கலம் காவல் துறையினர் எலும்புக் கூட்டை ஆய்வு செய்தனர் அப்போது அது பெண்ணின் எலும்பு கூடாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் எலும்புக்கூடு அருகில் கிடந்த சேலையை கைப்பற்றிய போலீசார், ஆறு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன அதே ஊரை சேர்ந்த பெண்ணாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

Villagers
’உங்க மேல சந்தேகமா இருக்கு..’ - ATM-ல் பணம் டெபாசிட் செய்ய வந்தவரிடம் பணம் பறித்த காவல் அதிகாரி கைது

மேலும் மண்டை ஓடு, மற்றும் எலும்பு கூடுகளை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். முந்திரி காட்டில் பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் இருப்பு கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com