Accused
Accusedpt desk

’உங்க மேல சந்தேகமா இருக்கு..’ - ATM-ல் பணம் டெபாசிட் செய்ய வந்தவரிடம் பணம் பறித்த காவல் அதிகாரி கைது

ஏடிஎம்-ல் பணம் போட வந்த நபரிடம் போலீஸ் எனக் கூறி மிரட்டி ரூ.35 ஆயிரம் பணத்தை பிடுங்கிச் சென்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
Published on

புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சித்திக் (50). இவர், கீழ்பாக்கம், ஈவிஆர் சாலை, கனரா வங்கி ஏடிஎம் மையத்தில் கடந்த 9ஆம் தேதி இரவு பணம் போடுவதற்காக வந்துள்ளார். அப்போது கையில் வாக்கி டாக்கியுடன் வந்த நபர், தான் போலீஸ் எனவும், பணம் குறித்து சந்தேகம் இருப்பதாகவும் கூறி சித்திக்கிடமிருந்து ரூ.34 ஆயிரத்து 500 பணத்தை பிடுங்கிச் சென்றுள்ளார்.

Arrested
Arrestedfile

இந்த சம்பவம் தொடர்பாக சித்திக், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் கீழ்ப்பாக்கம் போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பணத்தை பறித்துச் சென்றது ஐசிஎப் காவல்நிலைய போக்குவரத்து பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் ராமமூர்த்தி (55) என்பது தெரியவந்தது.

Accused
9 வயது மகளை கொடூரமாக தாக்கிய தாய்| வீடியோ எடுத்த தந்தை.. போலீஸில் புகார்! #Viralvideo

மேலும் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பில் குடும்பத்தோடு குடியிருந்து வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தியை கீழ்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com