கார் மோதிய விபத்து – 3 பேர் பலிpt desk
தமிழ்நாடு
கடலூர் | பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்து – 3 பேர் பலி
மேல் நாரியப்பனூர் அந்தோணியார் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்து. தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
செய்தியாளர்: கே.ஆர்.ராஜா
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மணலூர் ரயில்வே மேம்பாலத்தின் அருகே சின்னசேலம் அடுத்த மேல் நாரியப்பனூர் அந்தோணியார் திருத்தலத்திற்கு , அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டை பகுதியிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர். அப்போது அவர்கள் மீது விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் நோக்கி சென்ற கார் மோதி வ5pபத்துக்குள்ளானது.
இதில், சம்பவ இடத்திலேயே இருதயசாமி (40), அவரது மகள் சகாயமேரி என்ற ஸ்டெபி (18) மற்றும் ஸ்டெல்லா மேரி (35) மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்;ளனர். இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.