2 வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்
2 வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்pt desk

சென்னை | விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்

தாம்பரம் அருகே கட்டட வேலையின் போது, விளையாடிக் கொண்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: சாந்த குமார்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் அக்ரோஷ் சேக் (35), இவருடைய மனைவி அமல்லா இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தாம்பரம் அடுத்த கௌரிவாக்கத்தில் புதிதாக கட்டபட்டு வரும் தனியார் நிறுவன கட்டட பணியில் ஈடுபட்டுள்ளனர், இதையடுத்து வழக்கம் போல் நேற்று கீழ் தளத்தில் தனது இரண்டு வயது மகன் பிலால் ஷேக் விளையாட வைத்துவிட்டு முதல் தளத்தில் வேலை பார்த்துள்ளார்.

நீரில் மூழ்கி மரணம்
நீரில் மூழ்கி மரணம்pt desk

இதைத் தொடர்ந்து மதிய உணவு வழங்குவதற்காக குழந்தையை தேடிய போது, அருகில் இருந்த லிப்ட் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் குழந்தை மூழ்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்,

2 வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்
செங்கல்பட்டு | நின்றிருந்த ஆட்டோ மீது கார் மோதிய விபத்து..!

தகவல் அறிந்து வந்த சேலையூர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை Nமுற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு சோகததை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com