\
தீபாவளி கூட்டம்
தீபாவளி கூட்டம்pt

தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. ரயில், பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்!

தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்களால் தாம்பரம் ரயில் நிலையம், பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
Published on: 
Summary

தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை நோக்கி திரும்பும் மக்கள் கூட்டம் காரணமாக தாம்பரம் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பரபரப்பு அதிகரித்துள்ளது. பயணிகள் பாதுகாப்புக்காக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை கொண்டாட தென் மாவட்டங்களுக்கு சென்றிருந்த மக்கள், பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிவிட்டு, நாளை பள்ளி மற்றும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.

தீபாவளி கூட்டம்
தீபாவளி கூட்டம் pt

இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரக்கூடிய அனைத்து ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தாம்பரம் ரயில் நிலையத்தில்  பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. ரயிலில் இருந்து இறங்கும் பயணிகள், தங்கள் வீடுகளுக்கு செல்வதற்காக  பேருந்துகளை பயன்படுத்துவதால், தாம்பரம் பேருந்து நிலையத்திலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குடும்பத்துடன் பெட்டி, பைகளுடன் வரும் மக்களால் பேருந்து நிலையமே நிரம்பி வழிகிறது.

தீபாவளி கூட்டம்
தீபாவளி கூட்டம்pt

பயணிகள் கூட்டத்தை சமாளிக்கவும், பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும் தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, பயணிகளை பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளி கூட்டம்
”3 மாதங்களில் 8 ஆணவக் கொலைகள்; தனிச்சட்டம் வேண்டும்” - ஆளூர் ஷா நவாஸ் வலியுறுத்தல்!
தீபாவளி கூட்டம்
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 11 கொ**கள்.. தீபாவளியில் அரங்கேறிய கொடூரங்கள்!!