\
11 Murders in 24 Hours Across Tamil Nadu After Diwali Shocks State
கோப்புபடம்AI

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 11 கொ**கள்.. தீபாவளியில் அரங்கேறிய கொடூரங்கள்!!

தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 11 கொலைகள் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Published on: 

இந்தியா முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் நேற்று (நவம்பவர் 8) களைகட்டின. அதேசமயம், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிறார்கள் உட்பட தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்திருக்கும் 11 கொலை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சியில் 2 சிறார்கள் உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். சிவங்கங்கையில் 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலை
கொலைPt Web

தேனியில் தகராறில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமார் என்பவவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னை, கடலூர், திருவள்ளூர், திண்டுக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தலா 1 ஒருவர் என கொலைகள் நடந்துள்ளன.

தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம்!

இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இந்த ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் அளவுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

11 Murders in 24 Hours Across Tamil Nadu After Diwali Shocks State
பெரியார் அறிவுலகம்; ஜெயந்தி ஐஏஎஸ் பதவி பறிப்பு - தமிழக அரசு அதிரடி!