Cricketer Natarajanpt desk
தமிழ்நாடு
“விளையாட்டுத் துறையில் சாதிக்க விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் முக்கியம்”- கிரிக்கெட் வீரர் நடராஜன்
விளையாட்டு வீரர்களுக்கு தன்னம்பிக்கைதான் மிகப்பெரிய மூலதனம் என்று கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்: மோகன்ராஜ்
சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 64 ஆவது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் நடராஜன் பங்கேற்று சிறந்த விளையாட்டு வீரர்களை பாராட்டி பரிசு வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “விளையாட்டுத் துறையில் சாதிக்க விடாமுயற்சி முக்கியம்; அதேபோல் தன்னம்பிக்கைதான் மூலதனம். இலக்கை நோக்கி பயணிக்கும் போது எவ்வளவு தடைகள் வந்தாலும் தடைகளை சவாலாக ஏற்று பயணிக்க வேண்டும்” என்றார்.
Cricketer Natarajanpt desk
தொடர்ந்து பேசிய நடராஜன், “என்னுடைய வாழ்வில் நிறைய கஷ்டங்களை தாண்டிதான் தற்போது இந்த நிலைக்கு வந்துள்ளேன். என்னைப் போல் சேலத்தில் இருந்து நிறைய நடராஜன்கள் வர வேண்டும்” என்று பேசினார்.