Hospital
Hospitalpt desk

கோவை | ஏசி கேஸ் கசிவால் மூச்சுத் திணறல் - 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

கோவையில் உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் ஏசி கேஸ் கசிவு ஏற்பட்ட நிiலையில், விஷ வாயு தாக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிகிச்சைக்காக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Published on

செய்தியாளர்: சுதீஷ்

கோவை அடுத்த சூலூர் பகுதியில், நட்சத்திர உணவு விடுதிகளுக்கு பேக்கரி உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வெளிமாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்கள் பணியில் இருந்த போது ஏசியில் இருந்து கசிவு ஏற்பட்டு வாயு அறையில் பரவியுள்ளது.

ஏசி கேஸ் கசிவு
ஏசி கேஸ் கசிவுfile

இதனால் தலைச் சுற்று மற்றும் மயக்கம் அடைந்து பல பணியாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 10 ஆம்புலன்ஸ்களில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Hospital
சென்னை | முன்விரோதம் காரணமாக பாக்ஸர் வெட்டிக் கொலை – கதறி அழுத தாய்!

இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல் நிலைய போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com