சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை
சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறைpt web

“பொய் சொல்ல வேண்டாம்.. மார்ச் 25 வரை நடவடிக்கைக்குத் தடை” - EDக்கு நீதிமன்றம் கண்டிப்பு

டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது தொடர்பாக மார்ச் 25ம் தேதி வரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசு மனுவுக்கு பதிலளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.
Published on

செய்தியாளர் சுப்பையா

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை
பாஜகவின் தேசிய தலைவர் | அமித் ஷா... நட்டா... தேர் ஓட்டப்போகும் அடுத்த கிருஷ்ணர் யார்..?

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மணல் குவாரி விவகாரத்தில் அமலாக்கத் துறை இதுபோல சோதனை நடத்தியது. மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சம்மனுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. அதன்படி விசாரணைக்கு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்முகநூல்

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாநில அரசு அனுமதி பெற்றுதான் சோதனை நடத்த வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமலாக்க துறையின் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிட்டு கோரிக்கை வைக்காமல் பொத்தாம் பொதுவாக கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். மேலும், அதனை திருத்தம் செய்து புதிய மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை
மீண்டும் மீண்டுமா... இடியாய் இறங்க காத்திருக்கும் தங்கம்! இல்லையா சார் ஒரு எண்டு?

தொடர்ந்து டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, சோதனை நடத்தும் போது, அதற்குரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். எந்த தகவலும் தெரிவிக்காமல் அலுவலகத்துக்குள் நுழைந்து அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். குற்றம் மூலம் பணம் ஈட்டப்பட்டு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு சந்தேகப்படுவதற்கான காரணங்கள் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், 60 மணி நேரம் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை சட்டவிரோதமாக அமலாக்க துறையினர் சிறை பிடித்தனர். இது அதிகாரிகளின் தனிநபர் சுதந்திரத்துக்கு விரோதமானது என்றார். அரசு தலைமை வழக்கறிஞர், பெண் அதிகாரிகள் காலை 11 மணி முதல் நள்ளிரவு வரை சிறை பிடித்துள்ளனர். அதிகாலை 1 மணிக்கு சிலரை வெளியில் செல்ல அனுமதித்து விட்டு காலை 8 மணிக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர் என்றார்.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சோதனைpt web

இதையடுத்து நீதிபதிகள், டாஸ்மாக் அலுவலகம் சென்றதற்கான காரணங்களை அமலாக்கத் துறை தெரிவித்திருக்க வேண்டும். இரவில் ஏன் சோதனை நடத்தப்பட்டது என அமலாக்கத் துறைக்கு கேள்வி எழுப்பினர். இதை மறுத்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இரவில் சோதனை நடத்தப்படவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர் என விளக்கமளித்தார்.

சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை
சேலத்தில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி: குள்ள மனிதர்கள் வாழ்ந்த இடமா?

ஆனால், பொய் சொல்ல வேண்டாம். அனைத்தும் செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அமலாக்க துறை தனது அதிகாரத்தை செயல்படுத்திய விதத்தைதான் கேள்வி எழுப்புகிறோம் எனக் கூறி, அமலாக்க துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 25 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், எந்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்க துறை சோதனை நடத்தியது என்பது குறித்த விவரங்களையும் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை
மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம்; கூடாரங்களை அகற்றிய காவல்துறை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com