தமிழக வெற்றி‘க்’ கழகம் | கட்சிப்பெயரில் ‘க்’ சேர்க்கப்போகும் விஜய்?

நடிகர் விஜய் புதிதாக தொடங்கிய கட்சியின் பெயரில் பிழை இருந்ததாக விமர்சனம் எழுந்த நிலையில், அந்த பிழையை திருத்தி பெயர் மாற்றம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tamilaga Vettri Kazhagam
Tamilaga Vettri Kazhagampt web

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதாக நடிகர் விஜய் சமீபத்தில் அறிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். கட்சிக்கான கொள்கை மற்றும் திட்டங்கள் குறித்த தகவல்களும் வெளியிடப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

நடிகர் விஜய் - தமிழக வெற்றி கழகம்
நடிகர் விஜய் - தமிழக வெற்றி கழகம்

அதேசமயம், தற்போது ஒத்துக்கொண்டுள்ள திரைப்படப் பணிகளை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் நடிகர் விஜய் கூறியிருந்தார்.

Tamilaga Vettri Kazhagam
‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ - தமிழ்நாடு முழுவதும் திமுக MP-க்கள், அமைச்சர்கள் தீவிர பரப்புரை!

இதனிடையே நடிகர் விஜய் தொடங்கிய கட்சியின் பெயரில், வெற்றி என்ற வார்த்தையின் இறுதியில் ’க்’ சேர்க்கப்படாமல் இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து கட்சியின் பெயரில் மாற்றம் செய்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய அறிவிப்பு கட்சியினர் தரப்பில் இன்று வெளியாகும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்காக அவர்கள் தலைமை தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அங்கு அங்கீகரிக்கப்பட்ட பின், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அக்கட்சி ஆதரவாளர்கள், சமூகவலைதளங்களில் #தமிழகவெற்றிக்கழகம் என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி ட்ரெண்டு செய்து வருகின்றனரும்கூட!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com