\
distribution of envelopes printed in Hindi at govt Hospital
printed imagePT

மருத்துவமனை கவரில் இந்தி.. தவெக - திமுக பரஸ்பர குற்றச்சாட்டு.. உண்மை நிலவரம் என்ன?

கரூர் மருத்துவமனையில் இந்தியில் பிரின்ட் செய்யப்பட்ட கவர்கள் வழங்கப்பட்டது சர்ச்சையான நிலையில், இதுகுறித்து திமுக, தவெக இடையே மோதல் வெடித்துள்ளது.
Published on: 

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வரும் நோயாளிகளுக்கு காக்கி கவரில் மருந்து மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த காக்கி கவரில், மக்கள் எளிதில் புரிந்துகொண்டு மாத்திரையைச் சாப்பிடுவதற்காக காலை, மதியம், இரவு என தமிழில் பொறிக்கப்பட்டிருக்கும்.

இந்தியில் வழங்கப்பட்ட கவர்
இந்தியில் வழங்கப்பட்ட கவர்PT

இந்தச் சூழலில் நேற்று, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு, தமிழ், ஆங்கிலம், மற்றும் இந்தியில் பிரின்ட் செய்யப்பட்ட கவர்களில் மருந்துகள் வழங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இருமொழி கொள்கைதான் என்று தொடர்ந்து தமிழக அரசு கூறி வரும் நிலையில் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் பிரின்ட் செய்யப்பட்ட கவரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்து வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்த திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ’தமிழ்நாடு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ளதுபோல என்றும், முதலில் கரூர்.. இப்போது கோவையிலும் அதே நிலைமை’ என்றும் விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில், இந்தச் சர்ச்சைகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ’கடந்த டிசம்பர் 2025-இல், கவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஈரோடு மாவட்ட அச்சகத் தொழில் கூட்டுறவுச் சங்கம் மூலம் 4 லட்சம் கவர்கள் அச்சிட கடந்த திமுக ஆட்சியில் டிசம்பர் 31, 2025 அன்று அவசர ஆணை வழங்கப்பட்டு, அந்த கவர்கள் 2026 ஜனவரி மாதத்திலேயே மக்களிடம் புழக்கத்திற்கு வந்துவிட்டன’ என்று கூறியுள்ளார்.

மேலும், ’கோவையில் சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பே. அதாவது திமுக ஆட்சியில்தான், அலுவலக நடைமுறையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் மூலம் அச்சிடப்பட்டு நடைமுறைக்கே கொண்டு வரப்பட்டது’ என்றும் கூறியுள்ளார்.

’அதோடு தங்கள் ஆட்சியிலேயே இந்தியை அனுமதித்து, அதற்கான வார்ப்புருவை உருவாக்கி, நோயாளிகளிடமும் புழக்கத்திற்கு விட்டுவிட்டு, இப்போது ஆளுங்கட்சி மீது பழிபோடுவது எந்த வகையிலான அரசியல்’ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாற்றம் செய்யப்பட்டது
மாற்றம் செய்யப்பட்டதுPT

இதனிடையே கரூர் மற்றும் கோவை ஆகிய இரு இடங்களிலும் அந்த மாத்திரை உறைகளின் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கரூரில் மீண்டும் பழைய நடைமுறைப்படி, மத்திய சிறையிலிருந்து கவர்கள் பெறப்பட்டு 'தமிழ் மொழியில் மட்டுமே' விவரங்கள் முத்திரையிடப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கும் பணி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், கோவையில் மேற்கொண்டு நோயாளிகளின் பயன்பாட்டிற்காக 'தமிழ் மற்றும் ஆங்கிலம்' ஆகிய இரு மொழிகள் மட்டுமே கொண்ட மாத்திரை கவர்கள் உடனடியாகத் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

distribution of envelopes printed in Hindi at govt Hospital
முடிவுக்கு வந்த சகாப்தம்.. Final-லிலும் மாஸ் ஆட்டம்.. ஓய்வு பெற்றார் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com