தொகுதி பங்கீட்டில் இழுபறி இல்லை; காங்கிரஸ் பேரியக்கத்தை திமுக குறைத்து மதிப்பிடாது –செல்வப்பெருந்தகை

தமிழகம் வரும் மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகைபுதிய தலைமுறை

செய்தியாளர்: சாந்தகுமார்

சென்னை தாம்பரத்தில், செங்கல்பட்டு வடக்கு தெற்கு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் முன்னாள் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு வடக்கு - தெற்கு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம்
செங்கல்பட்டு வடக்கு - தெற்கு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம்புதிய தலைமுறை

முன்னதாக ‘ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக I.N.D.I.A. கூட்டணி அறிவிக்க வேண்டும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட வேண்டும், தமிழ்நாட்டில் 50 சதவீத இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்’ உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செல்வப்பெருந்தகை
"பிரதமர் மோடி தமிழ்நாட்டில் குடியேறினாலும் அவருக்கு ஓட்டுகள் விழாது"- கனிமொழி

இதைத் தொடர்ந்து செல்வப்பெருந்தகை பேசிய போது...

“I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற வேண்டும்”

“எந்த கட்சி வெற்றி பெறுகிறது என்பதில்லை; I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற வேண்டும், தேசம் வெற்றி பெற வேண்டும். I.N.D.I.A. கூட்டணி எப்படி போகப் போகிறது என நினைத்தார்கள், ஆனால் I.N.D.I.A. கூட்டணியில் உ.பி.யில் 17 தொகுதிகளை காங்கிரஸ் பெற்றிருக்கிறது. மேற்கு வங்கத்தில் 5 தொகுதிகள் என 271 தொகுதிகளில் ஒரு எதிர்க்கட்சி வேட்பாளர் நிற்கப் போகிறார்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகைபுதிய தலைமுறை

“மோடியின் பாட்டன், முப்பாட்டன் வந்தாலும் எங்களை அழிக்க முடியாது”

தமிழ்நாட்டிற்கு வந்த மோடி சொல்கிறார், ‘திமுக அழிந்து விடும், காங்கிரஸ் காணாமல் போய்விடும்’ என்று. மோடி வந்தாலும் அவர் பாட்டன், முப்பாட்டன் வந்தாலும் எங்களை அழிக்க முடியாது.

செல்வப்பெருந்தகை
ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக தமிழகம் வரும் பிரதமர்... பிளான் என்ன?

“காங்கிரஸ் தலைவர் பொறுப்பு..”

தலைவர் என்ற பொறுப்பை என்னிடம் கொடுத்திருக்கிறார்கள் என்றால் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில்தான் யார் வேண்டுமானாலும் தலைவராக முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எல்லோருடைய கனவும் காமராஜ் ஆட்சி வர வேண்டும் என்பதுதான். இதற்காக கட்சியை பலப்படுத்த வேண்டும்” என்று பேசினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்...

“குஜராத் மீனவர்களுக்கு ஒரு நீதி, தமிழக மீனவர்களுக்கு ஒரு நீதி”

“தேர்தலில் கடந்த முறையை விட பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் காங்கிரஸ் கட்சியினர் வெற்றி பெறுவார்கள். இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மோடி செல்லும் இடங்களில் கருப்புக் கொடி காட்டப்படும்.

ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். குஜராத் மீனவர்களுக்கு ஒரு நீதி, தமிழக மீனவர்களுக்கு ஒரு நீதி! அங்கு பாதுகாப்பு தரப்படுகிறது. இங்கு பாதுகாப்பில்லை. அத்தகைய மோடி அரசை கண்டித்து இன்று கருப்புக் கொடி காட்டப்படும்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகைபுதிய தலைமுறை

“அண்ணாமலை செய்வது பேக்கேஜ் யாத்திரை”

ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்தார். ஆனால், அண்ணாமலை செய்வது பேக்கேஜ் யாத்திரை. மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதி. I.N.D.I.A. கூட்டணி வராது என்றார்கள். ஆனால் இப்போது ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, சிவசேனா என கூட்டணி உறுதியாகியுள்ளது. 350 தொகுதிகளுக்கு மேல் I.N.D.I.A. கூட்டணியின் வெற்றி நிச்சயம்.

“ராகுல்காந்தி முடிவெடுத்துவிட்டால்...”

ராகுல்காந்தி, கடந்த முறை வயநாட்டில் நின்று வெற்றி பெற்றார். ராஜீவ் காந்தி உறங்கிக் கொண்டிருக்கின்ற இடம் ஸ்ரீபெரும்புதூர். அந்த தொகுதியில் ராகுல் காந்தி நிற்க வேண்டுமென முடிவெடுத்து விட்டால் திமுக கொடுத்து விடும்” என்றார்.

அவரிடம், தொகுதி பங்கீடு இழுபறியாக உள்ளதே என கேட்டதற்கு, “இழுபறி இல்லை, காங்கிரஸ் பேரியக்கத்தை திமுக ஒருபோதும் குறைத்து மதிப்பிடாது” என்று பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com