திருமாவளவன் - ஜோதிமணி
திருமாவளவன் - ஜோதிமணி web

காங்கிரஸ்காரருக்கு விசிகவில் சீட்.. திருமாவின் அதிரடி நகர்வு! யார் இந்த ஜோதிமணி..?

திருமாவளவன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த காட்டுமன்னார்கோயில் தொகுதியில் காங்கிரஸ்காரர் ஒருவருக்கு சீட் வழங்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.
Published on
Summary

காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிட இருந்த திருமாவளவன், திடீர் முடிவாக இடத்தை விட்டுக்கொடுத்து, சாதியொழிப்பு போராளி எல்.இளையபெருமாளின் மகன், காங்கிரஸ் சார்ந்த ஜோதிமணியை விசிக வேட்பாளராக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘தென்னாட்டு அம்பேத்கர்’ என போற்றப்பட்ட இளையபெருமாளின் மரபை தொடரும் ஜோதிமணி, அப்பாவின் நல்லபெயரை காப்பாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு உயரும் நிலையில் உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேட்பாளராக களமிறங்க இருந்த காட்டுமன்னார்கோயில் தொகுதியில், திடீர் ட்விஸ்ட்டாக திருமாவளவன் விட்டுக்கொடுத்து, எல்.இளைபெருமாளின் மகன் ஜோதிமணியை அறிவித்திருப்பது, வி.சி.கவினர் மத்தியில் மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்தில் பேசுபொருள் ஆகியிருக்கிறது. அதேநேரம், வாழ்நாள் முழுக்க சாதியொழிப்பு போராளியாக வாழ்ந்த எல்.இளையபெருமாள் மகன் ஜோதிமணிக்கு வாய்ப்பு வழங்கியிருப்பதற்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. யார் இந்த ஜோதிமணி? விரிவாக பார்க்கலாம்

திருமாவளவன் - ஜோதிமணி
தமிழ்நாட்டில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு சீட்..? காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக வெடித்த சர்ச்சை!

காட்டுமன்னார்கோவில் விசிக வேட்பாளர் ஜோதிமணியின் அப்பா எல்.இளையபெருமாள், இந்தியாவின் எந்த மூலையில் சாதிய கொடூரங்கள் அரங்கேறினாலும் அதைத்தடுக்க, அடுத்த நொடியே களத்திற்குச் சென்றுவிடும் சாதி ஒழிப்புப்போராளி. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரணாக விளங்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டம், இவரது ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் உருவானது. 'தென்னாட்டு அம்பேத்கர்' என்று போற்றப்பட்ட எல்.இளையபெருமாளுக்கு, சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவு அரங்கு அமைக்கப்படும் என அவரது நூற்றாண்டையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023-ஆம் ஆண்டு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில்தான், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி, தற்போது காட்டுமன்னார்கோவில் தனித்தொகுதி வேட்பாளராக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது.

எல். இளைய பெருமாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், மூன்று முறை எம்.பி., ஒருமுறை சட்டமன்ற உறுப்பினர், அகில இந்திய அளவிலான தேசிய கமிட்டியின் தலைவர், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனியாக ‘இந்திய மனித உரிமை கட்சி’யும் ஆரம்பித்தார். அந்த கட்சியின் சார்பில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் இருந்துள்ளார்கள். காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் கடைசிவரை ஒரு அம்பேத்கரிஸ்ட்டாகத்தான் வாழ்ந்தார். இப்படி சமூகத்திற்காக அரும்பாடு பட்ட எல். இளையபெருமாள் மகன் ஜோதிமணிக்குத்தான் விசிக தலைவர் திருமாவளவன் தற்போது சீட் வழங்கியுள்ளார்.

5 பெண் பிள்ளைகள், 4 ஆண் பிள்ளைகள் என இளைய பெருமாளுக்கு மொத்தம் 9 பிள்ளைகள். அதில், இரண்டாவது மகனாக பிறந்தவர்தான் ஜோதிமணி. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜோதிமணி, 1946-ஆம் அப்பா எல். இளையபெருமாள் ஆரம்பித்த ஆதிதிராவிட மகாஜன சங்கத்தை நடத்திக்கொண்டு கிராமம்தோறும் சென்று, அப்பாவின் கொள்கைகளைப் பரப்பிக்கொண்டிருக்கிறார். ஜோதிமணி காட்டுமன்னார்கோயில் தொகுதியில் வெற்றிபெற்று அப்பா சேர்த்து வைத்த, அந்த பெரிய சொத்தான நல்ல பெயரை காப்பாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

திருமாவளவன் - ஜோதிமணி
பாலியல் வழக்கு| தவெக வேட்பாளர் முன் ஜாமீனை ரத்துசெய்ய வேண்டும்.. நீதிமன்றத்தில் மனு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com