Congress and VCK opposition in CM Vijays special officer radhan pandit appointment
Ricky Radhan PanditCM Vijay

விஜயின் ஆலோசகராக ஜோதிடர் ராதன் பண்டிட் நியமனம்.. எதிர்க்கும் காங்., விசிக!

தேர்தலுக்கு முன்பே தவெகவின் வெற்றியை இவர் உறுதியாக கணித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
Published on

முதல்வர் விஜயின் ஆட்சியில், தமிழக அரசில் சிறப்புப் பணி அதிகாரியாக வெற்றிவேல் பதவி உயர்வு பெற்றதால், அவரது செல்வாக்கும் உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், முதல்வர் விஜயின் அரசியல் பிரிவு தனி அலுவலராக, ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ், விசிக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்துள்ளது. அவரது ஆட்சியில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதேநேரத்தில், பல புதிய அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் விஜயின் சிறப்பு அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய நியமனம், உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது. காரணம், தேர்தலுக்கு முன்பே தவெகவின் வெற்றியை இவர் உறுதியாக கணித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

1996, 2002ஆம் ஆண்டுக் காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட அதிமுக தலைவர்களோடு பயணம் செய்த இவர், அதன்பின் டெல்லி சென்றதும் வெற்றிவேல் என்ற இயற்பெயரோடு ராதன் பண்டிட் என்பதை இணைத்துக்கொண்டார். அங்கு பாஜகவின் முக்கிய தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சரத்பவார் ஆகியோர் குடும்பத்திற்கு ஜோதிடராக இருந்த இவர், 2020 முதல் விஜயுடன் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது. விஜயின் அரசியல் பயணம் முழுவதும் ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றிவேல் அவரது எதிர்காலத்தை வழிநடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

Congress and VCK opposition in CM Vijays special officer radhan pandit appointment
தவெக வெற்றியை முன்பே கணித்த பிரபல ஜோதிடர்.. உயர்பதவி கொடுத்த முதல்வர் விஜய்!

இந்த நிலையில், முதல்வர் விஜயின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் விஜயின் ஆட்சியில், தமிழக அரசில் சிறப்புப் பணி அதிகாரியாக வெற்றிவேல் பதவி உயர்வு பெற்றதால், அவரது செல்வாக்கும் உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், முதல்வர் விஜயின் அரசியல் பிரிவு தனி அலுவலராக, ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ், விசிக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில்,’ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் அரசு பதவியில் நியமிக்கப்பட்டதற்கு, தமிழக அரசு விளக்கம் அளிக்க முடியுமா’ என வினவியுள்ளார். ’மதச்சார்பற்ற அரசில் இது ஏற்கத்தக்கதல்ல என்றும், முதல்வர் விஜய் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ எனவும், விசிக எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

Congress and VCK opposition in CM Vijays special officer radhan pandit appointment
ஜோதிடர் To சிறப்பு பணி அதிகாரி.. யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்க்கு இவர் செய்தது என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com