சிறுமிகளை வைத்து மோசமான பேச்சு: நித்யானந்தா ஆசிரமம் மீது நடவடிக்கை கோரி கடிதம்

சிறுமிகளை வைத்து மோசமான பேச்சு: நித்யானந்தா ஆசிரமம் மீது நடவடிக்கை கோரி கடிதம்
சிறுமிகளை வைத்து மோசமான பேச்சு: நித்யானந்தா ஆசிரமம் மீது நடவடிக்கை கோரி கடிதம்

குழந்தைகளை பயன்படுத்தி வைரமுத்து மீது மிக மோசமான விமர்சனங்களை முன்வைத்து வரும் நித்யானந்தா ஆசிரமம் மீடு நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் கர்நாடகா மாநில போலீசாருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவருக்கு எதிராக பலரும் போர்க்கொடி தூக்க வைரமுத்தும் வருத்தம் தெரிவித்துவிட்டார். இருப்பினும் அவரை கண்டித்து பல இடங்களில் போராட்மும் அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.

ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவை விமர்சித்து கர்நாடகா மாநிலத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் சிறுமிகள் பேசும் பேச்சுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர்கள் தங்களை நித்யானந்தா ஆசிரமத்தில் வசிக்கும் சந்நியாசிகள் என அறிமுகப்படுத்திக் கொள்வதோடு வைரமுத்துவை கடுமையானக் கெட்ட வார்த்தைகளால் விமர்சிக்கின்றனர்.

இந்நிலையில் சிறுமிகளை பயன்படுத்தி வைரமுத்து மீது மிக மோசமான விமர்சனங்களை முன்வைத்து வரும் நித்யானந்தா ஆசிரமம் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் கர்நாடகா மாநில போலீசாருக்குக் கடிதம் எழுதியுள்ளார். மேலும் சந்நியாசிகள் எனக் கூறிக்கொண்டு நித்யானந்தா ஆசிரமத்தில் வசிக்கும் சிறுமிகளின் வீடியோ பேச்சு அடங்ககிய ஃபேஸ்புக் பக்கத்தையும் அவர் ஆதாரத்திற்கு இணைத்துள்ளார். “தனிநபர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் தாக்கி பேசுகின்றனர். மேலும் முஸ்லீலிம் மற்றும் கிறிஸ்துவ மக்களுக்கு எதிராகப் பேசி மக்களிடையே அமைதியைக் குலைக்க நித்யானந்தா ஆசிரமம் முயல்கிறது. எனவே அதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பியூஷ் மானுஷ் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com