பேட்ட, விஸ்வாசத்துக்கு சிக்கல்! காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

பேட்ட, விஸ்வாசத்துக்கு சிக்கல்! காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

பேட்ட, விஸ்வாசத்துக்கு சிக்கல்! காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
Published on

ரஜினியின் "பேட்ட" மற்றும் அஜித்தின் "விஸ்வாசம்" திரைப்படங்கள் சட்டத்தை மீறி திரையரங்குகளில் 6 காட்சிகள் வெளியாவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வரும் 10ம் தேதி ரஜினியின் "பேட்ட" மற்றும் அஜித்தின் "விஸ்வாசம்" திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், "வருகிற 10- ம் தேதி ரஜினி நடித்த "பேட்ட" , அஜித் நடித்த "விஸ்வாசம்" திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படங்கள் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் அரசு விடுமுறை அல்லாத தினங்களில் 6 காட்சிகள் திரையிடப்படுகின்றன. இது சட்டத்திற்கு புறம்பான செயல். அது போன்ற தினங்களில் 4 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என்ற அரசாணை இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாணையை மீறி 6 காட்சிகள் திரையிடுவதால் சட்டவிதி மீறல்கள் ஏற்படவும் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.மேலும் திரையரங்குகளில் 6 காட்சிகள் திரையிடப்படுவது ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை மூலம் உறுதியாகியுள்ளது. இது சட்டத்திற்கு புறம்பான செயல். அதனால் 6 காட்சிகள் திரையிடும் திரையரங்குகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். 6 காட்சிகளுக்கான வசூல் செய்த கட்டணங்களை பொதுமக்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும்'' என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரை அடுத்து வரும் 10ம் தேதி அறிவித்தபடி அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படங்கள் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com