\
ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை
ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை pt desk

ஸ்ரீபெரும்புதூர்: வடமாநில கர்ப்பிணிக்கு ஓடும் ஆம்புலன்ஸில் பிரசவம்... தாய் சேய் நலம்!

ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில கர்ப்பிணி ஒருவரை, ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
Published on

செய்தியாளர்: கோகுல்

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சுனாராம் (37). இவரது மனைவி புதனி (35). இருவரும் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆரனேரி கிராமத்தில் குடியிருந்து வருகின்றனர். புதனி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், இன்று அதிகாலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது கணவர், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளார்.

ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை
ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை pt desk

இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸில் புதனியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, அவருக்கு திடீரென பிரசவ வலி அதிகரித்துள்ளது, இதையடுத்து தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு, மருத்துவ உதவியாளர் மணிகண்டன், பிரசவம் பார்த்துள்ளார்.

ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை
“ராஜராஜ சோழன்... பொய்யைத்தான் பரப்பியுள்ளார்கள்” - பெ.மணியரசன்

இதில், சுகப்பிரசவத்தில் புதனிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தாயும் சேயும் நலமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவ உதவியாளர் மணிகண்டனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com