ஹாப்பி நியூஸ் மக்களே | வணிக சிலிண்டர் விலை குறைவு!
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
இது மாதந்தோறும் மாற்றியமைக்கப்படுகிறது.
அதன்படி, 19 கிலோ எடை கொண்ட அந்த வகை சிலிண்டர் ஒன்றின் விலை ரூ. 14.50 குறைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.1,966-ஆக விற்பனையாகிறது.மும்பையில் ரூ.1,756.50-ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,912.50-ஆகவும், புதுதில்லியில் ரூ.1803.50 ஆகவும் விற்பனையாகிறது.அதேவேளையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சிலிண்டர்களின் விலை மாற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 மாதங்களாக ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், ஆண்டின் முதல் நாளான இன்று விலை குறைந்துள்ளது புத்தாண்டில் தொடக்கத்தில் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.