புலர்ந்தது புத்தாண்டு 2025 | "புத்துணர்ச்சி, மகிழ்ச்சி மலரட்டும்" அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
புத்தாண்டையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்தாண்டு அனைவரது வாழ்விலும் புத்துணர்ச்சி, மகிழ்ச்சி மலரட்டும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி புத்தாண்டுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு புதிய வெற்றிகளுக்கு வித்திடட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். நம்பிக்கையையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார்.
ஆண்டு ழுழுவதும் மகிழ்ச்சியும், வளமும் அனைவரின் வாழ்விலும் நிறைய வேண்டும் என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து கூறியுள்ளார்.
நமது நல்ல கனவுகளை நனவாக்கும் ஆண்டாக புத்தாண்டை மாற்றுவோம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார்.
மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கூறியுள்ளார்.