\
Coimbatore Hindu Munnani Murder: 4 Get Life Term
கோப்புபடம்pt web

கோவை | இந்து முன்னணி நிர்வாகி கொலை.. 4 பேருக்கு ஆயுள் தண்டனை!!

கோவையை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி கொலை கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூவிருந்தமல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Published on: 

கோயம்புத்தூர் இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சி.சசிகுமார் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை முதலில் தமிழக காவல்துறை விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதாம் உசேன், சுபைர், முபாரக் மற்றும் ரபீகுல் ஹாசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

Sasikumar
Sasikumarpt web

முன்னதாக, 2015 செப்டம்பர் 22ஆம் தேதி சங்கனூர் பகுதியில் SDPI கொடி கம்பம் நடுவதில் ஏற்பட்ட தகராறில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் அதற்கு அடுத்த ஆண்டு அதே நாளான செப்டம்பர் 22ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்ததாகவும், அதன் தொடர்ச்சியாக ஐந்து நபர்களை கைது செய்ததாகவும் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்திருந்தது.

இந்தச்சூழலில் தான், இந்த வழக்கில் தீர்ப்பு இன்று பூவிருந்தமல்லி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சதாம் உசேன், சுபேர், முபாரக், ரபிக் அல் ஹாசன் ஆகிய நான்கு நபர்கள் குற்ற்வாளிகள் என தீர்ப்பு வாசிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நான்கு நபர்களும் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளனர். இதனால், புழல் சிறையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Coimbatore Hindu Munnani Murder: 4 Get Life Term
ஜெம் வீரமணி வழக்கு; வாயை திறக்காதது ஏன்? - திமுக குறித்து முதல்வர் கடும் தாக்கு!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com