சூலூர் அரசு பள்ளி மாணவர்கள்
சூலூர் அரசு பள்ளி மாணவர்கள்PT

கோவை: பார்வையற்றோருக்காக சென்சாருடன் கூடிய Blind Stick-ஐ உருவாக்கிய அரசு பள்ளி மாணவர்கள்!

கோவை மாவட்டத்தின் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தொழில் நுட்பத்துடன் கூடிய Blind Stick-ஐ கண்டறிந்து அசத்தி உள்ளனர்.
Published on

செய்தியாளர் : பிரவீண்

பார்வையற்றோருக்கு உதவும் வகையில் சென்சார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஸ்மார்ட் வாக்கிங் ஸ்டிக் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடி ஆகியவற்றை அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

கோவை மாவட்டத்தின் சூலூர் அருகே உள்ள அரசூரைச் சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவர்கள் கே. ஐசக் ஜெபக்குமார், ஆர். மருதீஷ் மற்றும் ஜே. வீரமணி ஆகியோர் பள்ளியில் செயல்படும் கற்றல் கற்பித்தல் ஆய்வுக்கூடத்தில், எளிய பொருட்களைப் பயன்படுத்தி இந்த தொழில்நுட்ப உபகரணங்களை உருவாக்கியுள்ளனர்.

சூலூர் அரசு பள்ளி மாணவர்கள்
திருவண்ணாமலை: “மீட்பு பணியில் தாமதம்” - உறவினர்கள் சாலை மறியல்!

கண்டுபிடிப்பின் சிறப்பம்சங்கள்..

சென்சார் மற்றும் சிப் போர்டுகளைப் பயன்படுத்தி மாணவர்களால் உருவாக்கப்பட்ட வாக்கிங்‌ ஸ்டிக், அதிர்வுகளை உணர்ந்து பயனாளருக்கு எச்சரிக்கை செய்கிறது. இதன் மூலம் பார்வையற்றோர் தடைகள் மற்றும் படிக்கட்டுகள் குறித்து முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்.

மைக்ரோ கண்ட்ரோலர் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்ட கண்ணாடி, பேட்டரி மூலம் இயங்குகிறது. இது பயனாளருக்கு முன்னால் உள்ள தடைகளை அடையாளம் கண்டு, ஒலி மூலம் எச்சரிக்கை செய்கிறது.

இது குறித்து மாணவர்கள் கூறும்போது, தங்களது ஆசிரியரின் வழிகாட்டுதலின் படி இந்த கருவிகளை தயாரித்ததாகவும், இந்த கருவிகள் பார்வையற்றோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.

மேலும் AI தொழில்நுட்பம் மற்றும் Google Maps-ஐப் பயன்படுத்தி இந்த கருவிகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

சூலூர் அரசு பள்ளி மாணவர்கள்
கடலூரின் கண்ணீர் கதை.. உணவுக்காக தவிக்கும் நிலை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com